வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது துங்கினேன்
வந்தபொது தூங்கிவிட்டு
வாழ்க்கை யெல்லம் ஏங்கினேன்
அற்பர்களின் சந்தையிலே
அன்புமலர் விற்றவன்
அன்புமலர் விற்றதற்கு
துன்ப விலை பெற்றவன்
வஞ்சிமலர் ஊமையான
மாளிகையின் அதிபதி
மாளிகையின் அதிபதிக்கு
மனதிலில்லை நிம்மதி
மண வாழ்க்கை மேடையில் நான்
மா பெரிய காவியம்
மா பெரிய காவியத்தின்
மனம் சிதைந்த ஓவியம் !
இது மு. மேத்தா எழுதிய கவிதை. இதை எனது தந்தை தனது 1983 வருட நாட்க்குறிப்பேட்டில் குறித்து வைத்து இருந்தார். இதைப் படித்த போது எனது நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.........
அரசு உயர் நிலைப் பள்ளி, 12ம் வகுப்பு, எனது தந்நை இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அது சார்பியல் பற்றி இருக்கலாம், சரியாக நினைவில்லை. அன்று அந்த மாணவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்.
ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்காமல் உறங்கி விட்டான். அவனை எழுப்பி, எனது தந்தை
'வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது துங்கினேன்
வந்தபொது தூங்கிவிட்டு
வாழ்க்கை யெல்லம் ஏங்கினேன்''
என்ற பாடல் வரிகளைப் பாடினார்.
அந்த மாணவன், இன்று இதை நினைவில் வைத்து இருக்கிறானா என்பது தெரியாது, ஆனால் எப்பொழுதெல்லாம் வாய்ப்பை இழக்கிறேனோ, அப்பொழுதெல்லாம், இந்தக் கவிதையும், எனது தந்தையின் நினைவும் என் மனதில் வந்து நிற்கும்.
இன்றும் என் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
5 comments:
remba touchinga irukuthu da..keep it up..
nanri muthuvel
ennakku muzhu kavithai kitaikuma
முழு கவிதையும் இவ்வளவுதான் என்று நினைக்கிறேன். தொகுப்பு கிடைத்தால் எழுதுகிறேன்
still r u remembering your father. He is great. I am pray for him now after a gap of 22 years.
Naa Chinna pillaiya irukum bothu indha kavithaiya enga appa adikadi soluvaruu... Aana apa indha kavithaioda artham kuda enaku theriyadhu aanalu enga appa adha oru nalla thoranaiyodu solluradha keka nalla irukum... Indha kavithai oda விளக்கம் therinja yaarachu solunga plse
Post a Comment